தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார் ஆமிர் கான்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆமிர் கான், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் எனப் பல முகங்கள் கொண்டவர். அவருக்கு இன்று 53வது பிறந்த நாள். எனவே, பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார் ஆமிர் கான். ஏற்கெனவே, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கிறார் ஆமிர் கான். ஃபேஸ்புக்கில் 15 மில்லியன் பேரும், ட்விட்டரில் 23 மில்லியன் பேரும் அவரைப் பின் தொடர்கின்றனர்.
இன்று இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள ஆமிர் கானை, 2 லட்சத்து 43ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.