பாலிவுட்

மாதவன் ஏற்க மறுத்த வில்லன் வேடம்

அபராசிதன்

தோள்பட்டை காயத்தால் வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார் மாதவன்.

ரோகித் ஷெட்டி இயக்கத்தில் தயாராகும் படம் ’சிம்பா’ தெலுங்கில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டெம்பர்’ படத்தின் இந்தி ரீமேக் இது. ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க இருக்கும் இந்தப் படத்தில், சரா அலிகான் ஹீரோயினாக நடிக்கிறார். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ‘தன்னை வில்லனாக நடிக்க அப்ரோச் செய்தது உண்மைதான்’ எனத் தெரிவித்துள்ளார் மாதவன்.

“ரோகித் ஷெட்டி மற்றும் அவருடைய படங்களின் மிகப் பெரிய ரசிகன் நான். என்னுடைய தோள்பட்டை காயத்தால் இந்தப் படத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் மாதவன்.

மாதவன் தோள்பட்டையில் கடந்த மாதம் அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT