ஸீரோ படத்தில் நடித்துவரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அதில் நடித்த தனது அனுபவங்கள் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது புதிய படமான "ஸீரோ" படத்தில் நடித்து வருவதைப் பற்றி தெரிவிக்கும்போது "ஒரு குழந்தைக்கு மிக வேகமாக வளர்ந்து வருகிறது" என்று தான் நினைப்பதாகக் கூறுகிறார் இந்த 52 வயது நடிகர்.
ட்விட்டர் பதிவில் ஷாருக்கான் தெரிவித்ததாவது:
ஸீரோ படம் உருவாகிக்கொண்டிருக்கும்போதே அப்படத்தை நான் காதலித்தேன். அந்த படத்துடனே வாழ்ந்தேன். இதற்காக மிகவும் நன்றி @aanandlrai மற்றும் மொத்தக் குழுவினருக்கும். இப்படத்தில் நான் பெற்ற அனுபவத்தை விவரிப்பதற்கு ஒரே வழி 'நான் ஒரு குழந்தையுடன் மிக வேகமாக வளர்ந்து வருகிறேன் ...'' என்று சொல்வதுதான்.
ஸீரோ திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனாக நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 20ல் ரிலீஸாகிறது.
''ஜாப் டாக் ஹாய் ஜான்'' பாலிவுட் திரைப்படத்தில் இணைந்து நடித்த சக கலைஞர்கள் அனுஷ்கா சர்மா மற்றும் காதரீனா கைஃப் ஆகியோருடன் இப்படத்தில்
ஷாருக்கான் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்.