பாலிவுட்

நடிகர் அஜய் தேவ்கன் தந்தை வீரு தேவ்கன் மறைவு: திரையுலகினர் அஞ்சலி

செய்திப்பிரிவு

நடிகர் அஜய் தேவகனின் தந்தை வீரு தேவ்கன், இன்று (மே 27) காலை மும்பையில் காலமானார். இறுதி ஊர்வலம், இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

பாலிவுட்டில் மிகப் பிரபலமான சண்டைப் பயிற்சி இயக்குநர், வீரு தேவ்கன். ‘ஹிம்மத்வாலா’, ‘ஷாஹேன்ஷா’, ‘த்ரிதேவ்’ என 100 படங்களுக்கும் மேல் சண்டைக் காட்சிகள் அமைத்துள்ளார்.

1991-ல் தனது மகன் அஜய் தேவ்கனை வைத்து ‘ஹிந்துஸ்தான் கி கஸம்’ என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். ‘க்ரந்தி’, ‘சவுரப்’, ‘சிங்காசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் உள்ளார்.

இவரது மறைவுக்கு, பாலிவுட் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT