பாலிவுட்

நான் இந்தியர்தான்; நீங்கள் எனக்காக குழம்பாதீர்கள்: விமர்சகர்களுக்கு தீபிகா பதிலடி

செய்திப்பிரிவு

நான் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நீங்கள் எனக்காக குழம்பாதீர்கள் என பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 71 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற 4-ம் கட்ட தேர்தலில் பல்வேறு பிரபலங்களும் வாக்களித்தனர்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வாக்களித்துவிட்டு தனது இன்ஸ்டாகிராமில் இட்ட பதிவு வைரலாகி வருகிறது. காரணம், தீபிகா படுகோன் அவர் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கருத்து பதிவிட்டிருப்பதே.

தீபிகா ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் பிறந்தார். அவரது தந்தை பிரகாஷ் படுகோன் சிறிது காலம் தொழில் நிமித்தமாக டென்மார்க்கில் இருந்தபோது தீபிகா பிறந்தார். அதனாலேயே தீபிகா இந்தியர் அல்ல விமர்சனங்கள் அவர் மீது தொடர்ந்து முன்வைக்கப்படுவதுண்டு.

அண்மையில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் கண்ணா பிரதமர் மோடியை பேட்டிகண்டபோதும் அக்‌ஷய்யிடம் கனடா நாட்டு குடியுரிமை இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், "தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வாக்களித்த பின் தீபிகா மை தடவிய விரலுடனான தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நான் யார் என்பதில், எங்கிருந்து வருகிறேன் என்பதில் எப்போதுமே சந்தேகம் இருந்ததில்லை. எனக்காக குழம்பிக் கொண்டிருப்பவர்களே குழப்பத்தைக் கைவிடுங்கள். இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த்" என தீபிகா பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT