பாலிவுட்

மீ டூ குறித்துப் பேச தகுந்த இடம் இது இல்லை: அஜய் தேவ்கன் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

'தி தி ப்யார் தி' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின்போது 'மீ டூ' குறித்த கேள்விக்குப் பதிலளிக்க இது தகுந்த இடமில்லை என்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கூறியிருப்பது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாக உள்ள 'தி தி ப்யார் தி' படத்தின் ட்ரெய்லர் செவ்வாய்க்கிழமை வெளியானது. இந்தப் படத்தை அகிவ் அலி இயக்கி இருக்கிறார். இதில் தபு, ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.

இதில் துணை நடிகராக நடித்துள்ள அலோக் நாத் மீது சமீபத்தில் எழுத்தாளர் ஒருவர் மீ  டூ புகார் எழுப்பினார்.எனவே, இந்தப் பட விழாவில் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அஜய் தேவ்கன், ''இதனைப் பேசுவதற்கு இது சரியான இடமில்லை. இந்தக் குற்றச்சாட்டு அந்த நபரின் மீது வைக்கப்படுவதற்கு முன்னரே இந்தப் படம் எடுக்கப்பட்டது'' என்றார்.

அஜய் தேவ்கனின் இந்தப் பதிலைக் குறிப்பிட்டு மீ  டூ இந்தியா அமைப்பு உட்பட பலரும் விமர்சித்துள்ளனர்.
 

SCROLL FOR NEXT