பாலிவுட்

வலைப்பதிவில் 11-வது ஆண்டு: 2008 தொடங்கி நாள் தவறாமல் எழுதும் அமிதாப்

ஐஏஎன்எஸ்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது தனிப்பட்ட வலைப்பதிவில் (blog) எழுதத் தொடங்கி இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவருக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் கடந்த ஏப்ரல் 2008-ம் ஆண்டு இதேநாளில் தனது வலைப்பதிவைத் தொடங்கினார். இதில் தனது புதிய படங்கள் சார்ந்த நிகழ்வுகள், சொந்த வாழ்க்கை, உடல்நலம், ரசிகர்கள் பிறந்த நாளின்போது அவர்களுக்கு வாழ்த்து, என நாள் தவறாமல் அவரது பதிவுகள் இடம்பெற்றிருந்தன.

வலைப்பதிவில் எழுதத் தொடங்கி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறித்து அமிதாப் வெளியிட்டுள்ள பதிவு:

''11 மங்களகரமான பக்திமயமானமாதாக பெரும்பாலான இந்தியர்களால் கருதப்படுகிறது. வரவிருக்கும் காலங்களில் இது தொடர வேண்டும் என்று நான் கைகளைக் குவித்து பிரார்த்தனை செய்ய மட்டுமே முடியும். என் நேர்மைக்குத் தகுந்தவாறு எனக்கு என்ன கொடுத்தாய் என்பதை பொருத்திப் பார்க்கும் திறன் எனக்கு உள்ளதாகவே நான் நம்புகிறேன்.

ஏப்ரல் 2018 17-ல் வலைப்பதிவைத் தொடங்கினேன். 17 ஏப்ரல் 2019 அன்று 11 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஒருநாளும் விடுபடாமல் தடையின்றி ஒவ்வொரு நாளும் நான் எழுதியிருக்கிறேன்.  என் நீட்டிக்கப்பட்ட குடும்பமாக திகழும் ரசிகர்களே, உங்கள் அன்பான பாசத்திற்கும் கருணைக்கும் நன்றி. அமைதியிலும் புரிதலிலும் நமது கைகள் இணைந்துள்ளன. விழுமியங்கள் அதிகம் நேசிக்கப்படுகின்றன''.

இவ்வாறு அமிதாப் தெரிவித்துள்ளார்.

தனது 76 வயதிலும் அமிதாப் பச்சன் அடுத்த படத்தில் பிஸியாகியுள்ளார். 'பிரம்மாஸ்த்ரா' என்ற பாலிவுட் படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட்டுடன் நடித்து வருகிறார்.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுடன் முதன்முதலாக தமிழிலும் 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் அமிதாப் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT