ஷாருக்கானைக் கிண்டல் செய்த ட்வீட் ஒன்றை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய கரண் ஜோஹர் லைக் செய்ததற்காக, அவரை ஷாருக்கானின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
அக்ஷய் குமார், பரீனித்தி சோப்ரா நடிப்பில் 'கேசரி' திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. இந்தப் படத்தின் துணை தயாரிப்பாளராக கரண் ஜோஹர் உள்ளார்.
இந்த நிலையில் அக்ஷய் குமாரின் 'கேசரி' திரைப்படத்துடன் ஷாருக்கானின் 'ஜீரோ' படத்தை ஒப்பிட்டு ஷாருக்கானை கடுமையாக விமர்சிக்கும் வகையில் ரசிகர் ஒருவர் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இதனை கரண் ஜோஹர் ட்விட்டரில் லைக் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஷாருக்கான் ரசிகர்கள் கரண் ஜோஹரை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.#Shameonyoukaranjohar என்று இந்திய அளவில் டிரெண்ட் செய்தனர். இதனைத் தொடர்ந்து கரண் தனது ட்விட்டர் பக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்றும், இந்த இடர்ப்பாடுக்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் பதிவிட்டார்.
எனினும் கரண் ஜோஹரை ஷாருக்கானின் ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.