பாலிவுட்

உற்சாக மிகுதியில் ரசிகர்கள் மேல் குதித்த ரன்வீர் சிங்: விமர்சிக்கும் நெட்டிசன்கள்

செய்திப்பிரிவு

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்  உற்சாக மிகுதிகாரணமாக ரசிகர்கள் மீது  குதித்ததில் சிலர் காயமடைந்தனர்.

பாலிவுர்  நடிகர் ரன்வீர் சிங், ராம் லீலா, பத்மா வதி ஆகிய திரைப்படங்களில் மூலம் பாலிவுட்டில் ரசிகர்களை பெற்றவர். இந்த நிலையில் ரன்வீர் சிங், அலியா பட்  நடிப்பில் ’கல்லி பாய்’  என்ற  திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி  வெளிவரவிருக்கிறது.

இந்தத் திரைப்படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்கள் தன்னை ஏந்திக் கொள்ளும்படி உற்சாக குதித்துள்ளார். இதில் சில ரசிகர்கள் காயமடைந்ததாக மும்பை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரன்வீர் சிங்கின் இந்தச் செயலை சமூக ஊடகங்களில் பலரும் கண்டித்துள்ளனர்.

ஒரு சாதரண குடிமகன் , குடிமகள் இம்மாதிரி பொதுவெளியில்  நடந்துக் கொண்டால் இந் நேரம் கைது செய்யப்பட்டிருப்பார்.  ரன்வீர் சிங் என்பதால் கண்டு கொள்ளாமல் போலீஸார் விட்டுவிட்டனர் என்று பலரும் விமர்சித்துள்ளனர்.

அவற்றில் சில

ی

Hugs-fordrugs?

அங்கு என்ன wwf  நடந்துக் கொண்டிருக்கிறதா

Shreyass Rao

இதனனை நியாயப்படுத்த முடியாது ...இது ஆபத்தானது..

CN

‏  அவரது குழந்தை தனத்தை குழந்தை தனமான தனது ரசிகர்களுக்கு காண்பிக்கிறார்.

SCROLL FOR NEXT