பாலிவுட்

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித் பாராட்டை பெற்ற கல்லி பாய் ரன்வீர் சிங்

ஏஎன்ஐ

ரன்வீர் சிங் - அலியா பட் நடிப்பில் வெளியான 'கல்லி பாய்' திரைப்படம் அனைத்து தரப்பிலும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. பல திரை நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் படத்தைப் பாராட்டிப் பேசி வருகின்றனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தும் 'கல்லி பாய்' படத்தைப் புகழ்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அதில் அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், "யோ ரன்வீர். வாழ்த்துகள். நீங்கள் செய்தது எனக்கு மிகவும் பிடித்தது. 'கல்லி பாய்'. நான் அந்தக் கால ஹிப் ஹாப் முதல் உலகில் இருக்கும் அனைத்து விதமான ஹிப் ஹாப்பையும் கேட்டுள்ளேன். நீங்கள் செய்தது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வென்று காட்டுங்கள்" என்று வில் ஸ்மித் பேசியுள்ளார்.

மேலும் 'கல்லி பாய்' படத்தின் 'அப்னா டைம் ஆயேகா' பாடலும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. மும்பையைச் சேர்ந்த ராப்பர்களான விவியன் ஃபெர்னான்டஸ் மற்றும் நவீத் ஷேக் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'கல்லி பாய் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது'. ராப் / ஹிப்ஹாப் இசையில் மிகுந்த ஈடுபாடு மிக்கவர் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். அவர் இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டியிருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில் ஸ்மித்தின் பாராட்டைக் குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரன்வீர், "அசல் ராப்பர் / நடிகரிடமிருந்து பாராட்டு. உங்களுக்கு என் மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

SCROLL FOR NEXT