முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான ராகேஷ் ரோஷன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அவரின் மகன் ஹிருத்திக் ரோஷன் உறுதி செய்துள்ளார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹிருத்திக் ரோஷன், ''சில வாரங்களுக்கு முன்னால் என்னுடைய தந்தை தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோயின் ஆரம்பக் கட்டத்தில் இருந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அறுவைசிகிச்சை நடைபெற்ற அன்றும்கூட, அவர் ஜில் செல்லத் தவறவில்லை. புற்றுநோய்க்கு எதிராக முழு மனதுடன் போராடி வருகிறார். குடும்பத்தில் இப்படிப்பட்ட ஆளுமையைப் பெறுவதற்கு நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம். அவருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று இன்று காலை கேட்டேன். அதுதான் இது'' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ரோஷனின் மகள் சுனைனாவும் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.