'மணிகர்ணிகா தி குயின் ஆப் ஜான்சி' பாலிவுட் திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா கங்கணாவை வியந்து பாராட்டியுள்ளார்.
பெண்களை மையமாகக் கொண்ட திரைப்பட வரிசையில் முதன்முறையாக 'மணிகர்ணிகா: தி குயின் ஆப் ஜான்சி' திரைப்படம் திரையிட்ட வார இறுதியில் ரூ.40 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
கங்கணா ரணாவத்தை பாலிவுட்டின் ராணி என்று அழைக்கிறார்கள். அதற்கான காரணம் இப்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாவும் இப்படத்தில் கங்கணா மிக அற்புதமாக நடித்துள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திரைப்பட வர்த்தக ஆய்வாளர் அதுல் மோகன் கூறுகையில், ''பெண் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திரைப்படம், இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக படம் வெளியான வார இறுதி நாளில் ரூ.40 கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
திரைப்படம் மற்றும் வர்த்தக வியாபார ஆய்வாளர் கிரிஷ் ஜோஹர் தெரிவிக்கையில், ''இப்படத்தில் பணியாற்றுகையில் பல தடைகளை கங்கணா ரணாவத் சந்தித்தார். அதையெல்லாம் கடந்து தற்போது ஒரு பெரிய அளவிலான திரைப்படத்தை அளித்து ஓர் உயிரோட்ட வாழ்க்கையை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டார். திட்டமிட்ட இலக்கை அடைந்ததில் ஒரு ஹெர்க்குலிய சாதனைதான். இத்திரைப்படம் பார்வையாளர்களை கவர்ந்து வெற்றியடைந்துவிட்டது'' என்று தெரிவித்தார்.
இயக்குநர் ராம்கோபால் வர்மா கங்கணா ரணாவத்தின் ஸ்டண்ட் நடிப்பை வியந்து பேசுகிறார்.
"நேர்மையாக சோசித்துப் பார்த்தால் இத்திரைப்படத்தில் கங்கணா ரணாவத் நடிப்பு மூலம் இத்திரைப்படத்தின் புரூஸ்லீயின் ஆவியை நான் உணர்ந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அவரது தீவிர முகத்தோற்றமே, பறந்தடிக்கும் ஸ்டண்ட் கூட நம்பக்கூடிய தோற்றத்தைத் தந்தது.''
இவ்வாறு ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.