பாலிவுட்

நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செய்திப்பிரிவு

மோடியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் 'பிஎம் நரேந்திர மோடி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

ஒமுங் குமார் இயக்கத்தில் உருவாகும் படம் 'பிஎம் நரேந்திர மோடி'. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக  வைத்து இந்தப் படம் எடுக்கப்படுகிறது. சந்தீப் சிங் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சாதாரண டீ விற்பவராக இருந்த மோடி, இந்தியாவின் பிரதமராக எப்படி ஆனார் என்பது இந்தப் படத்தில் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில், மோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விவேக் ஓபராய்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இன்று (ஜனவரி 7) வெளியிடப்பட்டது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட்டார். 23 இந்திய மொழிகளில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT