பாலிவுட்

ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நானும் பங்கேற்றுள்ளேன்: அனில் கபூர் பெருமிதம்

ஐஏஎன்எஸ்

ஆஸ்கார் விருது பெற்ற "ஸ்லம்டாக் மில்லியனர்" 2009 ஆம் ஆண்டில் வெளியானதிலிருந்து பத்தாண்டு முடிவடைந்த நிலையில், நடிகர் அனில் கபூர் அதில் நடித்ததில் பெருமையடையவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கபூர் தெரிவித்துள்ளதாவது:

''ஸ்லாம்டாக் மில்லியனர் படத்திற்காக படப்பிடிப்பு நடத்தியது எல்லாம் நேற்றுநடந்ததுபோல் இருக்கிறது. அன்றிலிருந்து ஒரு புதிய பயணமே என் வாழ்க்கையில் தொடங்கியது. பலரும் ஸ்லம்டாக் மில்லியனரை ஒரு தலைசிறந்த படம் என்றே அழைக்கின்றனர். அதில் என்னுடைய பங்கும் இருப்பதை இங்கே பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.''

இவ்வாறு அனில் கபூர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து திரைப்பட இயக்குநர் டானி பாயல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படம், மும்பை சிறார் காப்பகம் ஒன்றிலிருந்து செல்லும் ஒரு 18 வயது இளைஞன் கேம் ஷோ ஒன்றில் கலந்துகொண்டு அபரிதமான ஒரு வெற்றியைப் பெறும்வரை ஏற்படும் பல்வேறு சிக்கல்களை விவரிக்கிறது

அனில் குமார் படத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக நடித்திருந்தார். இதில் குடிசைப்பகுதி பையன் எப்படி செல்வந்தனாக மாறுகிறான் என்பதற்கு அடையாளமாக தேவ் படேல் நடித்திருந்தார்.

இத்திரைப்படம், 2009ஆம் ஆண்டில் 81வது ஆஸ்கர் போட்டியில் கலந்துகொண்டு சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி கலவை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை, சிறந்த பாடல், சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய 8 பிரிவுகளில் விருது குவித்தது.

இப்படத்தில் சிறந்த இசைக்கான விருதைப் பெற்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜெய் ஹோ பாடலுக்கும் இன்னொரு ஆஸ்கரை வென்று இரண்டு ஆஸ்கரை இந்தியாவுக்கு கொண்டுவந்தார்.

இந்தியாவின் புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியரும் இயக்குநரும் பாடலாசிரியருமான குல்சாரும் ஒலிப் பொறியாளர் ரசூல் பூக்குட்டியும் இப்படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT