தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமண ஜுரம் இத்தாலிக்கும் நீண்டிருக்கிறது. இங்குள்ள பிரம்மாண்டமான கோமோ ஏரி வில்லா டெல் பால்பியானெல்லோ மாளிகையில்தான் திருமணம் நடக்கிறது. ஹாலிவுட் வரை செல்வாக்கு நீண்டிருந்தாலும், திருமணத்தை முழுக்க வீட்டு நிகழ்ச்சியாகவே பாவிக்கிறார் தீபிகா. மணமகள் விருப்பப்படி தலையசைத்துவிட்டார் ரன்வீர். கல்யாணத்துக்குப் பெரும்பாலான திரைப்பட நட்சத்திரங்கள் அழைக்கப்படவில்லை. செல்பேசி, கேமராவுக்கும் அனுமதி இல்லை. “வாழ்க்கையில் எல்லாமே எல்லோரின் பார்வைக்குமானதும் இல்லை” என்கிறார்கள். சரிதானே!