பாலிவுட்

பெங்களூருவில் களைகட்டிய திருமண ஏற்பாடுகள்: தீபிகா படுகோன் உற்சாகம்

செய்திப்பிரிவு

இந்தி நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோன் திருமணத்தை ஒட்டி, தீபிகாவின் சொந்த ஊரான பெங்களூருவில் திருமண ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன.

பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தி நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோன் திருமணம் நவம்பர் 14,15-ம் தேதிகளில் நடைபெறுகிறது. தமிழில் ‘கோச்சடையான்’ படம் மூலம் அறிமுகமானவர் தீபிகா படுகோனே. தீபிகா நடித்து வெளியான ‘பத்மாவத்’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பத்மாவத் படத்தில் வில்லனாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ரன்வீர். இருவரும் இந்தத் திரைப்படத்தின் மூலம் காதல்வயப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இருவரும் தங்கள் திருமணத் தேதியை ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். அத்துடன் இருவரின் திருமணமும் இந்து முறைப்படி நடக்கும். ஊடகங்களின் பார்வையில் இருந்து விலகி இருக்கும் வகையில் திருமணம் இருக்கும். மிகவும் முக்கியமானவர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்படுவர். இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் 4 நாட்கள் வரை திருமண நிகழ்ச்சிகள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து தனது சொந்த ஊரான பெங்களூருவில் தீபிகா படுகோன், ரன்வீர் கபூர் மற்றும் நண்பர்களுடன் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

SCROLL FOR NEXT