''வீட்டிற்காக அதிகம் நேரத்தை செலவழிக்கத் தயாரில்லாத மனைவியை பெற்றவகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி'' என்று பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன் தனது நட்சத்திர மனைவி கஜோலைப் பற்றி கிண்டலடித்தார்.
சோனி தொலைக்காட்சி நடத்திவரும் இண்டியன் ஐடல் 10 டிவி ஷோ நிகழ்ச்சியில் நட்சத்திர ஜோடிகள் பங்கேற்று வருகின்றனர். இதில் பெரும்பாலும் நட்சத்திரத் தம்பதியினரின் சண்டை, காதல், மன ஒற்றுமே, வித்தியாசங்கள் அனைத்தும் பகிரப்படும். அவ்வகையில் இந்த வாரம் பாலிவுட் நட்சத்திர ஜோடியான அஜய் தேவ்கனும் நடிகை கஜோலும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தவாரம் ஐடல் 10 டிவி நிகழ்ச்சியில் இடம்பெறும் ஓரிரு சுவாரஸ்ய தகவல்கள் மட்டும் இங்கே ட்ரெயிலராக....
நிகழ்ச்சியில் ''வீட்டில் யார் சிங்கம்'' என்றொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கஜோல் வீட்டில் அஜய் எடுக்கும் முடிவு இறுதியானது என்றார். அப்போது அஜய் குறுக்கிட்டு,
கஜோல்தான் இதில் முக்கியமானவர். அவர்தான் குழந்தைகளோடு அதிகம் தன் நேரத்தை செலவிடுகிறார் என்றார். யார் சிங்கம் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்றார்.
''சரி வீட்டில் அதிக நேரத்தை செலவிடும் நபர் யார்'' என்றொரு கேள்வியும் அடுத்ததாகக் கேட்கப்பட்டது. அதற்கு அஜய் மிகவும் கிண்டலாக பதிலளித்தார்.
'' சாதாரணமாகவே வீட்டில் அதிகமாக இருக்கும் ஒரே நபர் நான்தான். இதற்கான நேரத்தை தாராளமாக செலவழிக்கிறேன். இந்த விஷயத்தில் கஜோல் ஒரு கன்ஜூஸ் (கஞ்சத்தனம் கொண்டவர்) வீட்டில் அதிக நேரம் இருப்பதை அவர் கடைபிடிப்பதே இல்லை.
வீட்டிற்காக நேரத்தை அதிகம் செலவழிக்காத மனைவியை பெற்றவகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி" என்று கூற அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்தது. ஒருவகையில் அஜய் தனது ஆதங்கத்தை பொதுவெளியில் உடைத்துவிட்டார் என்று கஜோல் சற்றே பொய்க்கோபம் கொண்டார்.
சோனி தொலைக்காட்சியின் வழியே இன்று இரவு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.