பாலிவுட்

2 கோடி ஆதரவாளர்களைப் பெறும் முதல் பாலிவுட் நடிகர் : இன்ஸ்டாகிராமின் மெமண்ட்டோ விருதில் திளைக்கும் அக்ஷய் குமார்

ஐஏஎன்எஸ்

இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் (2 கோடி) ஆதரவாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளா முதல் பாலிவுட் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அக்ஷய் குமாருக்கு இன்ஸ்டாகிராம் மெமண்டோ விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முறையான அறிவிப்பை இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஏர்லிப்ட் படத்தின்மூலம் புகழ்பெற்ற அக்ஷய் குமார் தனக்கு இன்ஸ்டாகிராம் வழங்கிய நினைவுப்பரிசு பெற்ற படத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவரது வலைதளப் பகிர்வு வருமாறு:

''இங்கு, இன்ஸ்டாகிராம் மக்களிடமிருந்து எனக்கு இன்னொரு தங்கம் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சியோடு இதை பகிர்ந்துகொள்கிறேன். 20 மில்லியன் ஆதரவாளர்களைப் பெற்றுள்ள முதல் பாலிவுட் ஆண் நடிகர் என்ற பெற்றுள்ளேன். இது இன்ஸ்டாகிராமின் ஒரு மைல்கல் என்று குறிப்பிடுகிறார்கள். உங்கள் நிறைந்த அன்புக்காகவும், பிரார்த்தனைக்காகவும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நேசமிக்க நன்றிகள்.''

அக்ஷய் குமாருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரரைப் பற்றிய அவரது சமீபத்திய பாலிவுட் திரைப்படமான கோல்ட் திரைப்படம் வசூலைக் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT