அமெரிக்காவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நடிகை சோனாலி பிந்த்ரே, தலைமுடி இல்லாத தனது புகைப்படத்தை வெளியிட்டு நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகையும் தமிழில் காதலர் தினம் படத்தில் நாயகியாக நடித்தவருமான சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை அவரது நெருங்கிய நண்பர்களான ஹிருதிக் ரோஷன், அவரது முன்னாள் மனைவி சுஜானி கான், காயத்ரி ஓபராய் ஆகியோர் அண்மையில் சந்தித்தனர். இந்நிலையில் நண்பர்கள் தினத்தையொட்டி சுஜானி, காயத்ரி ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை சோனாலி பிந்த்ரே வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் தலைமுடியின்றி காணப்படுகிறார்.
அவர் தனது செய்தியில், “இத்தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதை நான் கூறும்போது சிலர் விநோதமாக பார்க்கின்றனர். ஆனால் அதுதான் உண்மை. ஏனென்றால் வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடிக்கும் முக்கியத்துவம் தருகிறேன். மகிழ்ச்சிக்கான வாய்ப்பை தேடிப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
வலியும் உடல்சோர்வும் ஏற்பட்ட தருணங் கள் உண்டு. என்றாலும் நான் எனக்கு பிடித்ததை செய்கிறேன். எனக்கு பிடித்தவர்களுடன் பொழுதை கழிக்கிறேன். எனக்கு நம்பிக்கை யின் தூணாகத் திகழும் நண்பர்களுக்கு மிகவும் நன்றி. அவர்கள்தான் தங்களின் பிஸியான நேரத்துக்கு இடையிலும் என்னை பார்க்க வருகிறார்கள், போன் செய்கிறார்கள், மெஸேஜ் அனுப்புகிறார். நான் தனிமையாக இருப்பதாக உணரவிடுவதில்லை. உண்மை யான நட்பை உணரவைத்த உங்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார். இந்தப் புகைப்படத்தை ஹிருதிக் ரோஷன் எடுத்ததாகவும் சோனாலி பிந்த்ரே குறிப்பிட்டுள்ளார்.