தனுஷ் நடித்துள்ள இந்தி படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேரே இஸ்க் மே’. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழில் உருவாகியுள்ள இந்தப் படம் நவ. 28-ல் ரிலீசாகிறது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - ‘ராஞ்சனா’ படத்தின் இரண்டாம் பாகம் என்று விளம்பரம் செய்யப்பட்டாலும் ட்ரெய்லரை பார்க்கும்போது இதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது உறுதியாகிறது. விமானப் படை அதிகாரியாக வரும் தனுஷுக்கு, நாயகி கீர்த்தி சனோனுக்குமான கடந்த கால காதலும் தற்போதைய மோதலுமே படத்தின் கரு என்பதை யூகிக்க முடிகிறது. ட்ரெய்லர் முழுக்க தனுஷின் நடிப்பு ஆதிக்கம் தான். முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இதில் கீர்த்தி சனோனுக்கு சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. ட்ரெய்லரில் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு அம்சம் ரஹ்மானின் இசை. தமிழை தாண்டி இந்தியில் தனுஷுக்கு ரசிகர்கள் உண்டு. அவர்களை இந்த படம் திருப்திபடுத்துமா என்பதை ரிலீஸ் அன்று பார்க்கலாம். ‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் வீடியோ: