பாலிவுட்

இந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார்

செய்திப்பிரிவு

பிரபல இந்தி நடிகர் சதீஷ் ஷா, (வயது 74 ) உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். பாலிவுட் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் சதீஷ் ஷா.

இவர் மெயின் ஹூன் னா, ஹம் சாத் சாத் ஹெய்ன், கல் ஹோ நா ஹோ, ஜுட்வா உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த ,'சாராபாய் வெசஸ் சாராபாய்' என்ற தொடர் இவரை இன்னும் பிரபலமாக்கியது.

மும்பையில் மனைவி மதுவுடன் வசித்து வந்த இவர், சிறுநீரக பிரச்சினை காரணமாக அவதிப்பட்டார். இதற்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அக்.25-ம் தேதி காலமானார். அவர் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT