பாலிவுட்

பாலியல் புகார்: இசை அமைப்பாளர் கைது

செய்திப்பிரிவு

பிரபல இந்தி திரைப்பட இசை அமைப்பாளரும் பாடகருமான சச்சின் சங்வி, பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரட்டையர்களான சச்சின் - ஜிகர், இந்தி திரைப்படங்களுக்கு இசை அமைத்து வருகின்றனர். பிரபுதேவாவின் ஏ.பி.சி.டி, ராமையா வஸ்தாவய்யா, ராஜ்குமார் ராவின் ஸ்திரீ, ஸ்திரீ 2, ஜான்வி கபூரின் பரம் சுந்தரி, ராஷ்மிகா மந்தனா நடித்து சமீபத்தில் வெளியான தம்மா உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். இதில் சச்சின் சிங்வி பாடல்களும் பாடி வருகிறார். இவர்கள் இசை அமைப்பில் ‘ஸ்திரீ 2’ படத்தில் இடம்பெற்ற ‘ஆஜ்கி ராத்’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. இதில் தமன்னா ஆடி நடித்திருந்தார்.

சச்சின் சிங்வி மீது, 20 வயது பெண் ஒருவர், மும்பை போலீஸில் பாலியல் புகார் கூறியிருந்தார். அதில், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார். ஆனால், இப்போது ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், சச்சின் சங்வியை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT