நடிகர் ஷாருக்கான் நவ.2-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். அதை முன்னிட்டு அவரை கவுரவப்படுத்தும் விதமாக பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் ஷாருக்கான் திரைப்பட விழாவை இரண்டு வார காலம் நடத்துகிறது. இந்திய திரைப்படத்துறைக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பைப் போற்றும் வகையிலும் இப்பட விழா நடைபெறுகிறது.
ஷாருக்கான் நடித்து வரவேற்பைப் பெற்ற அவருடைய திரைப்படங்கள் இதில் திரையிடப்படுகின்றன. அக்.31-ம் தேதி முதல், சுமார் 30 நகரங்களில் உள்ள பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் அவர் நடித்த படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இதில் சென்னை எக்ஸ்பிரஸ், தில் சே, தேவதாஸ், ஜவான், கபி ஹான் கபி நா, மெயின் ஹூன் நா, ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.