பாலிவுட்

‘வார் 2’ படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருக்கு சிறப்பு ஜாக்கெட்!

செய்திப்பிரிவு

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இந்தியில் அறிமுகமாகும் படம் ‘வார் 2’. யாஷ் ராஜ் நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்ஸ் பட வரிசையின் ஆறாவது திரைப்படமான இதில், ஹிருத்திக்ரோஷன், கியாரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ளனர். அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் படம் ஆக.14-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்துக்காக, ஜூனியர் என்.டி.ஆருக்கு மனித இயந்திரம் போலுள்ள ஜாக்கெட்டை உருவாக்கியதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ஜுனியர் என்.டி.ஆரை சிறப்பாகக் காண்பிக்க விரும்பினேன். அதற்காக அவர் மிகவும் சிரமமின்றி சுமக்கும் வகையில் மனித இயந்திரம் போலுள்ள ‘ஜாக்கெட்டை’ அவருக்காகச் சிறப்பாக உருவாக்கியுள்ளேன். இந்த உடைகள் தோல், கரடுமுரடான ஜாக்கெட்டுகள் கொண்ட அமைப்பாகும். நான் உருவாக்கியுள்ள உடைகள் அவர் தோற்றத்தை இன்னும் அழகாகக் காட்டும்” என்றார்.

SCROLL FOR NEXT