பாலிவுட்

ஃபஹத் பாசிலுடன் இணைந்து நடிக்க அலியா பட் விருப்பம்!

ப்ரியா

ஃபஹத் பாசிலுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக பாலிவுட் முன்னணி நடிகை அலியா பட் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஃபஹத் பாசில். பல படங்கள் இவருடைய நடிப்பினால் மட்டுமே அடுத்தகட்டத்துக்கு சென்றிருப்பதாக விமர்சகர்கள் குறிப்பிட்டு இருந்தனர். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ‘ஆவேஷம்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

மலையாளத்தைத் தாண்டி பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஓடிடி தளத்திலும் வெளியாகி தொடர்ச்சியாக பல வாரங்கள் முதல் இடத்தை பிடித்தது. பல நடிகர்கள் இந்தக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசிலால் மட்டுமே நடிக்க முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

தற்போது இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான அலியா பட் அளித்துள்ள பேட்டியில் ஃபஹத் பாசிலுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார். “ஃபஹத் பாசில் ஓர் அற்புதமான நடிகர். அவருடைய நடிப்பு பாராட்டுக்குரியது. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று ‘ஆவேஷம்’. என்றாவது ஒரு நாள் அவருடன் இணைந்து பணிபுரிய விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் அலியா பட்.

SCROLL FOR NEXT