ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வார் 2’ படத்தில் டீசர் வெளியாகியுள்ளது.
யாஷ் ராஜ் நிறுவனம் பல்வேறு ஸ்பைவர்ஸ் படங்களை தயாரித்து வருகிறது. ‘ஏக் தா டைகர்’, ‘டைகர் ஜிந்தா ஹாய்’, ‘வார்’, ‘டைகர் 3’ மற்றும் ‘பதான்’ ஆகிய படங்களை இதுவரை தயாரித்திருக்கிறது. தற்போது இதன் தொடர்ச்சியாக ‘வார் 2’ படத்தினை தயாரித்து வருகிறது. இதில் ஹ்ரித்திக் ரோஷனுடன் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளார். இன்று ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
டீசர் எப்படி? - இப்படத்தின் மூலம் இந்தியில் அடியெடுத்து வைக்கிறார் ஜூனியர் என்டிஆர். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்தியில் அவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் டீசரில் ஹ்ரித்திக்கை விட என்டிஆருக்கு ஒரு படி மேலாக மாஸ் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. முந்தைய பாகத்தில் இருந்ததை விட ஆக்ஷன் காட்சிகள் சற்று கூடுதலாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஆக்ஷன், கிளாமர், ரத்தம், வன்முறை கலந்த கலவையாக டீசர் இருக்கிறது. படம் வரும் ஆகஸ்ட் 14 அன்று வெளியாக உள்ளது. டீசர் வீடியோ: