பாலிவுட்

‘ஜாத்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்!

ஸ்டார்க்கர்

‘ஜாத்’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டுவிட்டதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

சன்னி தியோல் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஜாத்’. இப்படத்தில் விடுதலைப் புலிகள் தவறாக சித்திரிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை முன்வைத்து தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் இப்படத்தினை திரையிட எதிர்ப்பு கிளம்பியது. இந்தச் சர்ச்சையினை முன்வைத்து படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், “படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்தக் காட்சி உடனடியாக படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எந்த மத உணர்வுகளையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. அதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.

மேலும், அந்தக் காட்சியை படத்தில் இருந்து நீக்குவதற்கான விரைவான நடவடிக்கையை எடுத்துள்ளோம். யாருடைய நம்பிக்கைகள் புண்படுத்தப்பட்டதோ அவர்களிடம் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் சன்னி தியோல், ரெஜினா, ரந்தீப் ஹோண்டா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜாத்’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை என்றாலும், ரூ.85 கோடி வசூலை கடந்திருக்கிறது. இதனை முன்வைத்து ‘ஜாத்’ படத்தின் 2-ம் பாகத்தினை அறிவித்துள்ளது படக்குழு. இதிலும் அதே படக்குழு மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளது.

Our sincere apologies to everyone whose sentiments were hurt.
The objectionable scene has been removed.#JAAT pic.twitter.com/vj8tbKDxoi

SCROLL FOR NEXT