பாலிவுட்

‘எம்.எஸ்.தோனி - த அன்டோல்டு ஸ்டோரி’: இரண்டாம் பாகம் உருவாகிறது

செய்திப்பிரிவு

தோனியின் வாழ்க்கை வரலாறான ‘எம்.எஸ்.தோனி - த அன்டோல்டு ஸ்டோரி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிரபல கிரிக்கெட் வீரருமான எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு, பாலிவுட்டில் ‘எம்.எஸ்.தோனி - த அன்டோல்டு ஸ்டோரி’ என்ற பெயரில் படமாக வெளியானது. தோனியின் சின்ன வயதில் இருந்து அவர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தது உள்படப் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தன.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. நீரஜ் பாண்டே இயக்கிய இந்தப் படத்தில், தோனி கேரக்டரில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்தார். திஷா பதானி, கியாரா அத்வானி, அனுபம் கெர், பூமிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அருண் பாண்டே இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தனர். 104 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 216 கோடி ரூபாயை வசூலித்தது. இந்தியில் உருவான இந்தப் படம், தமிழ், தெலுங்கு மற்றும் மராத்தியில் டப் செய்து வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. 2011-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்றதற்குப் பின்னர் தோனியின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை இந்தப் படத்தில் காட்டப் போகிறார்கள். அத்துடன், தோனியின் பர்சனல் வாழ்க்கையும் அழுத்தமாக இதில் சொல்லப்பட இருக்கிறது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆர்.எஸ்.வி.பி. ஃபிலிம்ஸ் சார்பில் ரோன்னி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தை நீரஜ் பாண்டே இயக்குவாரா அல்லது வேறு யாராவது இயக்குவார்களா என்பது இன்னும் முடிவாகவில்லை.

“சினிமா மேஜிக்னு சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது” - கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக் பேட்டி 

SCROLL FOR NEXT