பாலிவுட்

மறுபிறவி பற்றிய கதை: ரூ.500 கோடி பட்ஜெட்டில் அட்லி படம்?

செய்திப்பிரிவு

ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட் சென்ற இயக்குநர் அட்லி, அடுத்து சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

‘ஜவான்’ ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்ததால், அவர் அடுத்து இயக்கும் படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படம் 2 ஹீரோ கதையை கொண்டது என்பதால் மற்றொரு ஹீரோவாக நடிக்க, ரஜினிகாந்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்தி வெளியானது. இந்நிலையில் இந்தப் படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது என்றும் இது மறுபிறவி கதை என்றும் கூறப்படுகிறது.

“இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் அட்லி ஈடுபட்டு வருகிறார். மறுபிறவி கதையை கொண்ட இந்தப் படத்தின் மூலம் இதுவரை கண்டிராத உலகத்தை உருவாக்க இருக்கிறார். இந்தப் படத்துக்காக உடல் எடையை சல்மான் கான் குறைக்க இருக்கிறார்” என்கிறார்கள்.

SCROLL FOR NEXT