பாலிவுட் நடிகர்கள் பணியாற்றும் முறை குறித்து அனுராக் கஷ்யப் காட்டமாக பேசியிருக்கிறார். இந்தி திரையுலகம் செயல்படும் முறையினால், மும்பையை விட்டு தென்னிந்தியாவில் குடியேற உள்ளதாக அனுராக் காஷ்யப் கூறியிருக்கிறார். இவரது கருத்து இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அதே பேட்டியில் பாலிவுட் நடிகர்கள் பணியாற்றும் முறை குறித்தும் காட்டமாக பேசியிருக்கிறார்.
அப்பேட்டியில் அனுராக் கஷ்யப், “முதல் தலைமுறை நடிகர்கள் மற்றும் உண்மையில் உச்ச நடிகர்களை சமாளிப்பது மிகவும் வேதனையானது. அவர்கள் யாரும் நடிக்க விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் நட்சத்திரங்களாகவே இருக்க விரும்புகிறார்கள்.
நிறுவனம் யாரையும் ஸ்டார் ஆக்காது, ஆனால் ஒருவர் நட்சத்திரமாக மாறிய தருணத்தில், நிறுவனம் அவர்களிடமிருந்து பணம் சம்பாதிக்கிறது. திறமையைக் கண்டறியும் பொறுப்பு நம்முடையது. நாம் ரிஸ்க் எடுத்து 50 பேருடன் போராட வேண்டும்.
மேலும் படம் தயாரிக்கப்படும்போது, நிறுவனம் அவர்களைப் பிடித்து ஒரு ஸ்டார் ஆக மாற்றுகிறது. அவர்களை மூளைச் சலவை செய்து ஸ்டார் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அவர்கள் அவர்களை நடிப்பு பயிற்சிக்கு அனுப்ப மாட்டார்கள், ஆனால் ஜிம்முக்கு அனுப்புவார்கள். இவை அனைத்துமே கவர்சிக்காக மட்டுமே, ஏனென்றால் அவர்கள் மிகப் பெரிய ஸ்டார்களாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் அனுராக் கஷ்யப்.