பாலிவுட்

‘தெறி’ ரீமேக் ‘பேபி ஜான்’ ட்ரெய்லர் எப்படி? - பாசப் போராட்டமும் அதிரடி ஆக்‌ஷனும்!

செய்திப்பிரிவு

மும்பை: வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பேபி ஜான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘தெறி’. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், நடிகை மீனா மகள் நைனிகா, மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. விஜய் நடித்த கேரக்டரில் வருண் தவண் நடித்துள்ளார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வாமிகா நடித்துள்ளனர். இந்தப் படத்தை சினிஒன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் சார்பில் அட்லீயின் மனைவி ப்ரியா தயாரிக்கிறார். காளீஸ் இயக்குகிறார். இவர் ஜீவா நடித்த ‘கீ’படத்தை இயக்கியவர். தமன் இசையமைக்கிறார். இப்படம் வரும் டிச.25-ல் வெளியாகிறது.

ட்ரெய்லர் எப்படி? - பெரிய அளவில் எதையும் மாற்றாமல் ஒரிஜினல் படத்தின் காட்சிகளை அப்படியே எடுத்திருந்தாலும், இதனை பான் இந்தியா அளவில் ஹிட்டாக்க வேண்டும் என்ற படக்குழுவின் உழைப்பு ட்ரெய்லரின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ஆக்‌ஷன் காட்சிகளுக்காக கூடுதலாக மெனக்கெட்டுள்ளனர். விஜய் இடத்தில் வருண் தவான். இரண்டு கேரக்டர் லுக்கிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். சமந்தா கேரக்டரில் கீர்த்தி, ஏமி ஜாக்சன் கேரக்டரில் வாமிகா. மறைந்த இயக்குநர் மகேந்திரன் நடித்த கதாபாத்திரத்தில் ஜாக்கி ஜெரோஃப் கொடூர வில்லனாக வருகிறார். தெறி படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையும் பாடல்களும் பெரும் பலம். ட்ரெய்லரில் தமனின் இசை பெரியளவில் ஈர்க்கவில்லை என்றாலும் படத்தில் அதை ஈடு செய்திருப்பார் என்று நம்பலாம். ட்ரெய்லரின் இறுதியில் ஒரு முன்னணி இந்தி நடிகரின் கேமியோ வருகிறது. ‘பேபி ஜான்’ ட்ரெய்லர் வீடியோ:

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT