பாலிவுட்

ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’ முதல் பாகம் 2026 தீபாவளிக்கு ரிலீஸ்! 

செய்திப்பிரிவு

மும்பை: ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிக்கும் ‘ராமாயணம்’ இந்தி திரைப்படத்தின் முதல் பாகம் வரும் 2026 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 2வது பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ராமாயணக் கதை திரைப்படமாக உருவாகிறது. இதில், ரன்பீர் கபூர் ராமராக நடிக்கிறார். சாய் பல்லவி, சீதையாக நடிக்கிறார். ராவணனாக யஷ், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங், நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் படம் உருவாகிறது.

நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இதைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. சாய் பல்லவி, ரன்பீர் சிங்கின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் கசிந்தன. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT