பாலிவுட்

ராஜ்குமாருடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது: ஷ்ரத்தா கபூர்

செய்திப்பிரிவு

ராஜ்குமாருடன் ராவுடன் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறிவிட்டதாக  பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.

ஏக் வில்லன், ஆஷிகி 2 போன்ற படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் சமீபத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக் கொண்ட ஐஃபா கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் செய்தியாளர்களிடம் தனது அடுத்த படங்கள் குறித்து பேசினார்.

அதில் ஷ்ரத்தா கபூர் கூறியதாவது,  "நான் முதல் முறையாக நகைச்சுவை கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறேன். ராஜ்குமார் ராவ் திறந்த நடிகர். அவருடன் பணியாற்ற வேண்டும் என்ற எனது கனவு நனவாகிவிட்டது. நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்"

சாய்னா நேவால் பயோபிக்கில் நடிப்பது குறித்து பேசும்போது,  ”நான் தற்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதனைத் தொடர்ந்து இந்த வருடத்தின் இறுதியில் சாய்னா நேவால் பயோபிக்கில் நடிக்க இருக்கிறேன்” என்றார்.

தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் நடிப்பது குறித்த கேள்விக்கு அவர் ஒரு சிறந்த மனிதர் என்று ஷ்ரத்தா கபூர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT