‘ஸ்ட்ரீ 2’ படக்குழுவினரின் படத்தில் நடிக்க ஷாரூக்கான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
2025-ம் ஆண்டு தொடக்கத்தில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளார் ஷாரூக்கான். இதில் அவருடைய மகளும் இணைந்து நடிக்கவுள்ளார். இதனை முடித்துவிட்டு ‘பதான் 2’ படத்தினை தொடக்க திட்டமிட்டுள்ளார் ஷாரூக்கான். இதனை சித்தார்த் ஆனந்த் இயக்க, யஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு, அடுத்ததாக ‘ஸ்ட்ரீ 2’ இயக்குநரான அமீர் கெளசிக் இயக்கத்தில் நடிக்க ஷாரூக்கான் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமீர் கெளசிக் மற்றும் தினேஷ் விஜயன் இருவரையும் ஷாரூக்கான் சந்தித்து பேசியிருக்கிறார். ‘ஸ்ட்ரீ 2’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் தினேஷ் விஜயன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாரூக்கானுக்கு ஏற்றவகையில் ஒரு சாகச கதையினை இந்தக் கூட்டணி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் நடிக்க ஷாரூக்கான் ஆர்வம் காட்டி வருகிறார். மூன்று முறை சந்திப்பு நடந்து முடிந்துவிட்டதால், இந்தக் கூட்டணி உறுதியாகி இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.