ஏ.ஆர்.ரஹ்மான் 
பாலிவுட்

‘காந்தி’ வெப் தொடருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை

செய்திப்பிரிவு

மகாத்மா காந்தியின் வாழ்க்கைக் கதை, ‘காந்தி’ என்ற பெயரில் வெப் தொடராகத் தயாராகிறது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த வெப் தொடரை இந்திப் பட இயக்குநர் ஹன்சல் மேத்தா இயக்குகிறார். ராமச்சந்திர குஹா எழுதிய புத்தகங்களின் அடிப்படையில் இந்த வெப் தொடர் தயாராகிறது. இதில் காந்தியாக, பிரதிக் காந்தி நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் நடக்க இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. “இந்த வெப் தொடரில் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்ததன் மூலம் எங்கள் கனவு நனவாகி இருக்கிறது. கதையின் உணர்வை உயர்த்தும் தனித்துவமான திறனை அவரது இசை கொண்டிருக்கிறது” என்று ஹன்சல் மேத்தா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT