ஷாருக் கான் தயாரிக்கும் ‘பட்லா’ படத்தில், அமிதாப் பச்சன் நடிக்கிறார்.
ஷாருக் கானின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ‘ரெட் சில்லீஸ் என்டெர்டெயின்மென்ட்’. 2000-ம் ஆண்டு ‘ட்ரீம்ஸ் அன்லிமிட்டெட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 2003-ம் ஆண்டு ‘ரெட் சில்லீஸ் என்டெர்டெயின்மென்ட்’ எனப் பெயர் மாறியது.
இந்த நிறுவனத்தின் மூலம் பெரும்பாலும் ஷாருக் கான் நடிக்கும் படங்களே தயாரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஜான் ஆப்ரஹாம், சித்தார்த் மல்ஹோத்ரா, அஜய் தேவ்கன், ஜான் ஆப்ரஹாம் நடித்த படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதன்முறையாக ஷாருக் கான் தயாரிப்பில் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார். பிரதான பாத்திரத்தில் அவர் நடிக்கும் படத்திற்கு ‘பட்லா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுஜய் கோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். முக்கிய வேடத்தில் டாப்ஸி நடிக்கிறார். அமிதாப் பச்சன், டாப்ஸி இருவரும் ஏற்கெனவே ‘பிங்க்’ படத்தில் நடித்துள்ளனர்.