இதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கங்கனா ரனாவத், “பாலிவுட்டின் 3 கான்களான ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர்கான் ஆகியோரை வைத்து படம் தயாரித்து இயக்கும் ஆசை இருக்கிறது. அவர்களின் நடிப்பு திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன். எனக்கு பிடித்த கான்களில் மறைந்த இர்ஃபான் கானும் ஒருவர். அவரை இயக்க முடியாமல் போனதற்காக எப்போதும் வருந்துவேன்” என்றார்.