பாலிவுட்

பாலிவுட் வசூலில் பிரபாஸ் ஆதிக்கம்: 4-வது ரூ.100 கோடி க்ளப் சாதனை!

செய்திப்பிரிவு

ஹைதாராபாத்: பாலிவுட் பாக்ஸ் ஆஃபீஸில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தற்போது திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘கல்கி 2989 ஏடி’திரைப்படம் இந்தியில் அவருக்கான 4-வது ரூ.100 கோடி க்ளப் என்பது கவனிக்கத்தக்கது.

பிரபாஸ் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம் இந்தியில் மட்டும் ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியது. கடந்த ஆண்டு வெளியான ஜூனில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ரூ.130 கோடியை வசூலித்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான ‘சலார்’ரூ.153 கோடியை இந்தியில் மட்டும் வசூலித்தது.

தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசனின் ‘கல்கி ஏடி 2898’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை எட்டியுள்ளது. இதில் இந்தியில் மட்டும் இப்படம் ரூ.110 கோடியை வசூலித்துள்ளது. பிரபாஸின் 4 படங்கள் இந்தியில் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT