பிரபல இந்தி நடிகர் நவாஸுதின் சித்திக். தமிழில் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ள இவர், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், காதலிப்பவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, “நான் சொல்வதைமக்கள் தவறாகப் புரிந்து கொள்ளலாம். திருமணம் செய்துகொள்வதற்கான தேவை என்ன இருக்கிறது? திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நீங்கள் ஒருவரையொருவர் அதிகமாக நேசிக்கிறீர்கள். திருமணத்துக்குப் பிறகு காதல் குறையத் தொடங்குகிறது. உங்கள் வாழ்க்கைக்குள் குழந்தைகள் வருகிறார்கள். நிறைய விஷயங்கள் நடக்கின்றன.நீங்கள் யாரையாவது காதலித்து தொடர்ந்து அவரைகாதலிக்க விரும்பினால் திருமணம் மட்டும் செய்து கொள்ளாதீர்கள். நமது காதல் மகிழ்ச்சியை தரும் என்று நாம் நம்புகிறோம். ஆனால், சில காலங்களில் உங்கள் வேலை மட்டுமே மகிழ்ச்சியை தருகிறது” என்று கூறியுள்ளார்.
நடிகர் நவாஸுதின் சித்திக், ஆலியாஎன்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு வழக்குத் தொடுத்திருந்தார் ஆலியா. பின்னர் இருவரும் இணைந்தனர்.