மும்பை: பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர். இவர் தமிழில், வி.ஐ.பி, லிட்டில் ஜான், கனெக்ட், முதல்வர் மகாத்மா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவரது அலுவலகம் மும்பை அந்தேரியில் உள்ள வீரதேசாய் சாலையில் உள்ளது. அங்கு திருடர்கள் பூட்டை உடைத்து பணம் மற்றும் படத்தின் நெகட்டிவை திருடிச் சென்றுள்ளனர்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “என் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஒரு பெட்டியில் வைத்திருந்த ரூ.4 லட்சம் மற்றும் தேசிய விருது பெற்ற ‘மெய்னே காந்தி கோ நஹி மாரா’ படத்தின் நெகட்டிவை திருடி சென்றுள்ளனர். போலீஸில் புகார் அளித்துள்ளேன்.
சிசிடிவி கேமராவில், 2 பேர் திருடிவிட்டு ஆட்டோவில் செல்வது தெரியவந்துள்ளது. போலீஸார் விசாரித்து வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.