மும்பை: தமிழில், கார்த்தி, நாகர்ஜுனா நடித்த, ‘தோழா’, விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘வாரிசு’ படங்களைஇயக்கியவர் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி. இவர் இப்போது இந்தி படம் இயக்குகிறார். ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். ‘வாரிசு’ படத்தை தயாரித்த தில் ராஜூ தயாரிக்கிறார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
தயாரிப்பாளர் தில் ராஜு, தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ஜெர்ஸி’ படத்தை இந்தியில் தயாரித்தார். அதில்ஷாகித் கபூர் நடித்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது அவருடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்போது உருவாவது ரீமேக் இல்லை என்றும் நேரடி இந்திப் படம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது..