பாலிவுட்

கோஹினூர் வைரத்தைவிட சல்மான் கான் முக்கியமானவர் - பிரதமருக்கு ராக்கி சாவந்த் கோரிக்கை

செய்திப்பிரிவு

இந்தி நடிகையான ராக்கி சாவந்த், தமிழில், என் சகியே, முத்திரை படங்களில் நடித்துள்ளார். கடந்த 14-ம் தேதி நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதையடுத்து அவருக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராக்கி சாவந்த், அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர், “சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது நான் துபாயில் இருந்தேன். அதைக் கேள்விபட்டு அழுதேன். கோஹினூர் வைரத்தை விட சல்மான் கான், நம் நாட்டுக்கு முக்கியமானவர். அவரைப் பாதுகாக்க வேண்டும். அவர் ஏழைகளுக்கு உதவுபவர். இசட், ஒய், எக்ஸ் பிளஸ் உட்பட அனைத்து விதமான பாதுகாப்பையும் அவருக்கு வழங்க வேண்டும். கங்கனா ரனாவத்துக்கு எந்த காரணமும் இல்லாமல் இவ்வளவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சல்மான் கான் பாலிவுட்டின் ஜாம்பவான். அவருக்குப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT