பாலிவுட்

தமிழில் வெளியாகிறது ‘படே மியான் சோட்டே மியான்’

செய்திப்பிரிவு

சென்னை: அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப், பிருத்விராஜ், சோனாக்ஷி சின்கா, மனுஷி சில்லர் உட்பட பலர் நடித்துள்ள இந்திப் படம் ‘படே மியான் சோட்டே மியான்’. அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஏ.ஏ.இசட். ஃபிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஏப்.10-ல் தமிழிலும் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இதன் ட்ரெய்லர் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படம் பற்றி அக்‌ஷய் குமார் கூறும்போது, "ஆக்‌ஷன், காமெடி கலந்த கதையை கொண்ட படம் இது. முன்பைவிட இதில், அதிக திறமையை வெளிப்படுத்தியுள்ளேன். அருமையான குழுவினருடன் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்ததை மறக்கமுடியாது. அனைத்து ரசிகர்களையும் இந்தப் படம் மகிழ்விக்கும்" என்றார்.

SCROLL FOR NEXT