பாலிவுட்

ஒரே வீட்டில் 2 சின்னத்திரை நடிகைகள் மரணம்

செய்திப்பிரிவு

மும்பை: இந்தி சின்னத்திரை நடிகை டோலி சோஹி. இவர், கலாஷ், மேரி துர்கா, கும்கும் பாக்யா, ஜனக், பரினீதி உட்பட பல தொடர்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாகக் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 47.

டோலியின் சகோதரியும் நடிகையுமான அமன்தீப் சோஹி (40), மஞ்சள் காமாலை காரணமாக, நேற்று முன் தினம் மரணமடைந்தார். அவர் மறைந்த மறுநாளே அவர் சகோதரி டோலியும் மறைந்திருப்பது அவர்கள் குடும்பத்திலும் சின்னத்திரை உலகிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைகள் மறைவுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT