பாலிவுட்

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் அஜய் தேவ்கன்

செய்திப்பிரிவு

மும்பை: ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா, தமிழில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் நடித்துள்ள ‘தங்கலான்’, சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிக்கும் ‘கங்குவா’ படங்களை இப்போது தயாரித்து முடித்துள்ளார்.

அடுத்து அவர் இந்திப் படங்களைத் தயாரிக்க இருக்கிறார். இதற்காக மும்பையில் அலுவலகம் ஒன்றை சமீபத்தில் திறந்துள்ளார்.

இந்நிலையில் அவர் அஜய் தேவ்கன் நடிப்பில் புதிய படத்தைத் தயாரிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

“அஜய்தேவ்கனிடம் மாஸ் ஆக்‌ஷன் கதை, ஆக்‌ஷன் கதை மற்றும் த்ரில்லர் கதைகள் சொல்லப்பட்டுள்ளன. இதில் ஒன்றை அவர் தேர்வு செய்த பின் படப்பிடிப்பு தொடங்கும்” என்று கூறப்படுகிறது.

சூர்யா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’, ஆரி அர்ஜுனன் நடித்த ‘நெடுஞ்சாலை’, சிம்பு நடித்த ‘பத்து தல’ படங்களை இயக்கிய ஒப்பிலி என். கிருஷ்ணா, அஜய் தேவ்கன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT