பாலிவுட்

பிப்ரவரி 6-ம் தேதி முதல் ஷமிதாப்

ஸ்கிரீனன்

'ராஞ்சனா' படத்தைத் தொடர்ந்து பால்கி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'ஷமிதாப்' திரைப்படம், பிப்ரவரி 6, 2015ல் வெளியாகிறது.

'ராஞ்சனா' படத்தைத் தொடர்ந்து பால்கி இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்தார் தனுஷ். ஏற்கனவே 'ராஞ்சனா' பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த இந்திப் படத்தில் ஒப்பந்தமாகிருப்பதை தமிழ் திரையுலகம் ஆச்சர்யத்தோடு பார்த்தது. அப்படத்தில் அமிதாப், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் தனுஷ் உடன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் மூலமாக கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷராஹாசன் திரையுலகிற்கு அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவ்வப்போது மும்பை சென்று வந்தார் தனுஷ்.

2015ம் ஆண்டின் தொடக்கத்தில் தனுஷின் அடுத்த இந்திப் படம் வெளியாக இருக்கிறது. பிப்ரவரி 6ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

இப்படத்தில் தனுஷ் வாய் பேச முடியாத, காது கேட்காத உறுதுணை நடிகராகவும், தனுஷ் பாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்கும் கலைஞராக அமிதாப் பச்சனும் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதனை படக்குழு உறுதி செய்யவில்லை.

SCROLL FOR NEXT