பாலிவுட்

ரசிகரின் போனை தூக்கி ஏறிந்த பாடகர் ஆதித்ய நாராயண்: நெட்டிசன்கள் கொந்தளிப்பு

செய்திப்பிரிவு

சத்தீஸ்கர்: இசை நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் இருந்த மைக்கால் ரசிகரின் கையில் அடித்து, அவரது செல்ஃபோனை தூக்கி எறிந்த பாடகர் ஆதித்ய நாராயணின் சம்பவம் நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் நகரில் உள்ள ருங்டா கல்லூரியில் பாடகர் ஆதித்ய நாரயணின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஷாருக்கானின் ‘டான்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ‘ஆஜ் கி ராத்’ பாடலை ஆதித்ய நாராயண் பாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கோபமடைந்தவர், ரசிகர் ஒருவரை நோக்கிச் சென்று தனது கையில் இருந்த மைக்கால் ரசிகரின் கையில் அடித்து, அவரிடமிருந்த செல்ஃபோனை பிடிக்கி தூக்கி எறிந்தார்.

பின் மீண்டும் எந்தவொரு பதற்றமும் இல்லாமல் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார். அவரின் இந்தச் செயலுக்கு என்ன காரணம் என்பது குறித்து தெரியவில்லை. இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆதித்ய நாராயண் பிரபல பாடகர் உதித் நாராயணின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. “இவர் தன் தந்தையை பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்” என பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

நெட்டிசன் ஒருவர், “இவருக்கு என்ன ஆனது. ஏன் இப்படி செய்கிறார். தந்தை பெயரை கெடுக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் “மோசமான செயல்” என கண்டித்துள்ளார்.

ஆதித்ய நாராயணன் மற்றொரு முகம் என நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

SCROLL FOR NEXT