பாலிவுட்

2 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பஜ்ரங்கி பைஜான் சீனா முழுவதும் திரையிடல்

பிடிஐ

சல்மான் கான் நடித்த பாலிவுட் திரைப்படம் 'பஜ்ரங்கி பைஜான்' இரண்டாண்டுகளுக்கு முன் இந்தியாவில் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், தற்போது சீனா திரையரங்குகள் அனைத்திலும் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.

இப்படத்தை கபீர்கான் இயக்கியிருந்தார். இதில் கரீனா கபூர் கானும் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் இந்து குடும்பத்தைச் சேர்ந்த ஹனுமானின் தீவிர பக்தரான பஜ்ரங்கியின் கதையை கூறுகிறது, ஆறு வயது நிரம்பிய பாகிஸ்தான் பெண் தனது சொந்த நாட்டிற்கு திரும்பி தனது குடும்பத்துடன் மீண்டும் எப்படி இணைகிறார் என்பது திரைப்படத்தில் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளது.

''இனம், மதம், தேசியவாதம் ஆகியவற்றை மீறியும் மக்கள் அன்பு செலுத்த முடியும் என்பதை இப்படம் பேசியுள்ளது'' என சீன ஊடகமான சின்குவா செய்தி நிறுவனத்திடம் சல்மான் கான் தெரிவித்தார்.

‘’திரைப்படங்களில் சமூக உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற போக்கை ஹாலிவுட் திரைப்படங்களிலிருந்து இந்திய திரைப்படங்கள் பாடம் கற்றுக்கொண்டன'' என்கிறார் சைனீஸ் நேஷ்னல் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் கல்விநிறுவனத்தின் ஆய்வு மாணவரான டிங் யாபிங்.

அமீர்கானின் 'டங்கல்' மற்றும் 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' ஆகிய பாலிவுட் திரைப்படங்கள் சமீபத்தில் சீனாவில் பெரும் வெற்றி பெற்றன. 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' ஜனவரி 19 அன்று வெளியிடப்பட்டதிலிருந்து 700 மில்லியன் யான் (சுமார் 110 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வசூலைக் குவித்தது.

17 ஜூலை 2015 வெளியான 'பஜ்ரங்கி பைதான்' இரண்டரை ஆண்டுகள் கழித்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு, சீனா முழுவதும் ரிலீஸாவதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT