பாலிவுட்

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ( 73). இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், வங்காளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான 'யாகாவாராயினும் நாகாக்க' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

கொல்கத்தாவை சேர்ந்த அவருக்குத் திடீரென நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அவர் மகன் மஹாக்‌ஷய் சக்கரவர்த்தி கூறும்போது, “அப்பா நலமாக இருக்கிறார். அவருக்கு வழக்கமான பரிசோதனைதான் நடக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT