பாலிவுட்

சல்மான் கான் பண்ணை வீட்டுக்குள் நுழைய முயன்ற 2 பேர் கைது

செய்திப்பிரிவு

மும்பை: இந்தி நடிகர் சல்மான் கானுக்கு சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் தனது கூட்டாளிகள் மூலம் தொடர்ந்து விடுக்கும் கொலை மிரட்டலைத் தொடர்ந்து, அவருக்கு மும்பை போலீஸார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். அவருக்குத் துப்பாக்கி லைசென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சல்மான் கானுக்கு மும்பையை அடுத்த பன்வெல் பகுதியில் பண்ணை வீடு இருக்கிறது. இந்த வீட்டுக்குள் 2 பேர் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர். அவர்களை வீட்டின் பாதுகாவலர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.அஜேஷ் குமார், குருசேவக் சிங் என்ற அவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் போலி ஆதார் கார்டு இருந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்

SCROLL FOR NEXT